அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு சீனா ஏமாற்றம்
2024-04-19 10:01:47

ஐ.நாவின் அதிகாரப்பூர்வ உறுப்பு நாடுகளில் ஒன்றாகப் பாலஸ்தீனத்தைச் சேர்ப்பது குறித்து, ஐ.நா பாதுகாப்பவை ஏப்ரல் 18ஆம் நாள் வாக்கெடுப்பு நடத்தியது. ஐ.நா பாதுகாப்பவையின் நிரந்தர உறுப்பு நாடான அமெரிக்கா இதில் எதிர்ப்பு வாக்கு அளித்ததன் காரணமாக, இந்த வரைவுத் தீர்மானம் நேரடியாக நிராகரிக்கப்பட்டது. இந்த வாக்கெடுப்பில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக 12 நாடுகள் வாக்களித்தன. பிரிட்டன் மற்றும் ஸ்விட்சர்லாந்து பங்கெடுக்கவில்லை. அமெரிக்கா மட்டுமே எதிர்ப்பு தெரிவித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி ஐ.நாவிற்கான சீன நிரந்தரப் பிரதிநிதி ஃபூசொங் கூறுகையில், அமெரிக்காவின் முடிவு குறித்து சீனா ஏமாற்றம் அடைவதாகவும், சுதந்திர நாட்டை உருவாக்குவது, பாலஸ்தீன மக்களின் பறிக்கப்பட முடியாத உரிமையாகும் என்றும் தெரிவித்தார். மேலும், ஐ.நாவின் உறுப்பு நாடாக பாலஸ்தீனம் விளங்குவது, பாலஸ்தீன-இஸ்ரேல் பேச்சுவார்த்தைக்கு நிபந்தனையை உருவாக்குவதற்குத் துணைப் புரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, பாலஸ்தீன ஹமாஸ் இயக்கம் 19ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.