மத்திய கிழக்கு நிலைமை குறித்து ஐ.நா தலைமைச் செயலாளர் வேண்டுகோள்
2024-04-20 19:49:15

ஐ,நா தலைமைச்செயலாளர் குட்ரேஸ் ஏப்ரல் 19ஆம் நாள் அவரின் செய்தித்தொடர்பாளர் துஜாரிக் மூலம் வெளியிட்ட அறிக்கையில், மத்திய கிழக்குப் பிரதேசத்தில் ஒன்றை ஒன்று பழிவாங்கும் ஆபத்தான சுழற்சியை உடனடியாக முடிவுக்கு வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

எந்த வடிவத்திலான பழிவாங்கும் செயலையும் குட்ரேஸ் கண்டித்ததோடு, பன்னாடுகள் கூட்டாக முயற்சித்து, மத்திய கிழக்கு பிரதேசம் மற்றும் மேலும் பெருமளவில் பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய போக்கினைத் தடுக்க வேண்டும் என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இஸ்ரேல் 19ஆம் நாள் விடியற்காலை ஈரானில் உள்ள ஓர் இடம் மீது தாக்குதல் நடத்தியது என்று ஏ.பி.சி நிறுவனம் தெரிவித்தது. மேலும் மத்திய ஈரானின் இஸ்ஃபஹான் மாநிலத்தின் வட கிழக்கு பகுதியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. ஏனெனில், ஈரான் வான் பாதுகாப்புப் படை “வானில் பறந்த சில பொருட்களை”ச் சுட்டு வீழ்த்தியது என்று ஈரான் செய்தி ஊடகம் அதே நாள் செய்தி வெளியிட்டது.