ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பு மீது சீனா விருப்பம்
2024-04-20 19:53:07

ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகள், ஐ.நாவை மையமாகக் கொண்ட சர்வதேச அமைப்பு முறையைப் பேணிகாப்பதை சீனா ஊக்குவிப்பதாக ஐ.நாவுக்கான சீன நிரந்தர பிரதிநிதி ஃபு சுங் ஏப்ரல் 19ஆம் நாள் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், ஐ.நா மற்றும் பாதுகாப்பவை, ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பு உள்ளிட்ட பிராந்திய அமைப்புகளுடன் ஒத்துழைத்து, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புத் துறைகளிலான அறைகூவல்களைப் பயன்தரும் முறையில் சமாளிப்பதை சீனா எப்போதும் ஆதரிக்கிறது என்றும், தற்போது உலகளவில் குழப்பங்கள் ஏற்பட்டு, ஐரோப்பியக் கண்டத்தில் பாதுகாப்பு அபாயம் மற்றும் அறைகூவல்கள் அதிகரித்துள்ளன. உறுப்பு நாடுகளிடையேயான நம்பிக்கையை அதிகரித்து, மோதல்களைத் தடுத்து இணக்கம் செய்து, பாரம்பரியமற்ற பாதுகாப்பு அச்சுறுத்தலைச் சமாளிப்பதற்கு மேலதிக பங்காற்றி, ஐரோப்பாவின் அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பேணிகாப்பதற்கு ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பு மேலதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என சீனா எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

உக்ரைன் நெருக்கடி தொடர்ந்து, தொடர்புடைய தரப்புகள் பொறுப்பான மனப்பான்மையுடன், போர் நிறுத்தத்துக்கான தூதாண்மை முயற்சியை அதிகரித்து, நெருக்கடியை அரசியல் முறையில் தீர்ப்பதை முன்னேற்ற வேண்டும் என சீனா மீண்டும் வேண்டுகோள் விடுப்பதாக அவர் தெரிவித்தார்.