கோடை காலத்தில் ரயில் பயணிகளின் வசதிக்காக 9111 சிறப்பு ரயில்கள் இயக்கி இந்திய ரயில்வே சாதனை
2024-04-20 17:09:11

கோடை காலத்தில் பயணிகளின் வசதிக்காக 9,111 சிறப்பு ரயில்களை இயக்குவதாக இந்திய ரயில்வே அமைச்சகம்  ஏப்ரல் 19ம் நாள்  தெரிவித்துள்ளது.

கோடைகாலத்தில்  அதிகரிக்கும் ரயில் பயணிகளின், தேவையைப் பூர்த்தி செய்யவும், சுமூகமான மற்றும் வசதியான ரயில் சேவையை அளிக்கும் வகையில் 9,111 ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.

2023 ஆண்டு கோடை காலத்தில் 6,369 சிறப்பு ரயில் பயணங்கள் ரயில்வேயால் வழங்கப்பட்டது.. கடந்த ஆண்டின் சிறப்பு ரயில் சேவையுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு சிறப்பு ரயில் சேவைகள் கணிசமான உயர்வைக் குறிக்கின்றன.