பாகிஸ்தானில் புயல் மழை:87 சாவு
2024-04-20 17:20:09

கடந்த ஒரு வாரத்தில் பாகிஸ்தானில் தொடர்ச்சியான புயல் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட பாதிப்புகளால் குறைந்தது 87 பேர் உயிரிழந்தனர். 82 பேர் காயமுற்றனர். நாடளவில் 2715 வீடுகள் சேதமடைந்தன. மேலும், சில பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் நிலச்சரிவின் காரணமாக சீர்குலைந்தன என்று அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஏப்ரல் 19ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உள்ளிட்ட மத்திய மற்றும் உள்ளூர் அரசு வாரியங்கள் முழு முயற்சியுடன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள மக்களுக்கு அவசர உதவியளித்து, பல்வேறு இடங்களில் சீர்குலைந்த நெடுஞ்சாலைகள் மற்றும் பாலங்களைச் செப்பனிட வேண்டும் என்று பாகிஸ்தான் தலைமையமைச்சர் ஷாபாஸ் ஷெரீப் 19ஆம் நாள் உத்தரவிட்டார்.