இலங்கைக்கு கடல் வழியாக வரும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டணம் இல்லா ஆன்லைன் விசா சேவை
2024-04-21 16:38:41

இலங்கையின் குடியுரிமை மற்றும் குடியேற்றம் அமைச்சகம் ஏப்ரல் 20ம் நாள் வெளியிட்ட அறிக்கையில், இலங்கைக்கு கப்பல் மூலம் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகளுக்கு ஆன்லைன் விசா முறையை அறிமுகம் செய்துள்ளது.

இந்த அமைச்சகத்தின் உயர் அதிகாரி, இமல் குணவர்த்தன செய்தியாளரிடம் பேசும் போது, இலங்கைக்கு கப்பல் மூலம் வரும் சுற்றுலா பயணிகள் ஆன்லைன் சேவையை பயன்படுத்தி, நான்கு நாட்கள் வரை செல்லுபடியாகும் விசாவைப் பெறலாம் என்று தெரிவித்தார். மேலும்  இதற்கு இலங்கை அரசு ஒரு அதிகாரப்பூர்வ இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், சுற்றுலா பயணிகள், இலங்கை வருவதற்கு முன்பு eVisa விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் குணவர்தன தெரிவித்தார்.

சீனா, இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா, தாய்லாந்து, மலேசியா மற்றும் ஜப்பான் ஆகிய நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஏப்ரல் 30 வரை விசாவுக்கான கட்டணம் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.