பாகிஸ்தானில் சீன மொழி படிப்பு பரவல் அதிகரிப்பு
2024-04-21 16:48:03

பாகிஸ்தானில் சீன மொழியைக் கற்றுக் கொள்ளும் மக்கள் தொகை உயர்வேகமாக அதிகரித்து வருகிறது. அந்நாட்டின் அரசு இயன்ற அளவிலான நடவடிக்கைகளின் மூலம் சீன மொழி படிப்பைப் பரவல் செய்து வருகிறது என்று பாகிஸ்தான் தலைமையமைச்சர் ஷாபாஸ் ஷெரீப் ஏப்ரல் 20ஆம் நாள் தெரிவித்தார்.

ஐ.நாவின் 15வது சீன மொழி தினத்தின்போது அவர் உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில், சீன மொழி பல ஆயிரம் ஆண்டுகள் வரலாறுடையது. கடந்த பல ஆண்டுகளாக, சீனாவின் பொருளாதார வளர்ச்சி உலகின் கவனத்தை ஈர்த்த சாதனைகளைப் பெற்றுள்ளது. சீன-பாகிஸ்தான் பொருளாதார மண்டலக் கட்டுமானத்துடன், இரு நாடுகளின் பொருளாதார மற்றும் பண்பாட்டு உறவு உயர்வேக வளர்ச்சியடைந்து வருகிறது. பாகிஸ்தான் அரசு முழு முயற்சியுடன் சீன மொழி மற்றும் சீன இலக்கியம் படிப்பைப் பரவல் செய்து, இரு நாட்டு மக்கள் உறவின் மேலும் சீரான வளர்ச்சியை முன்னேற்ற விரும்புவதாகத் தெரிவித்தார்.