© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
கடந்த சில நாட்களாக பல நாடுகளின் சமூக ஊடகங்களில் பாலஸ்தீனம் ஐ.நாவில் சேர்வது குறித்து நிராகரிப்புரிமையைப் பயன்படுத்திய அமெரிக்கா மீதான குற்றச்சாட்டுக்கள் அதிகமாக வெளியாகியுள்ளது. சீனா, எகிப்து, அயர்லாந்து முதலிய பல நாடுகள் அமெரிக்காவின் செயலுக்கு ஏமாற்றம் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் செயலினால், மத்திய கிழக்குப் பிரதேசத்தில் நியாயம் மற்றும் பன்முக அமைதியை நனவாக்கும் முயற்சி பின்னடைந்து வருகிறது என்று வளைகுடா ஒத்துழைப்பு ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் குற்றஞ்சாட்டியுள்ளது.
ஐ.நா பாதுகாப்பவையின் நிரந்தர உறுப்பு நாடான அமெரிக்கா, 18ஆம் நாள் நிராகரிப்புரிமையைப் பயன்படுத்தி, பாலஸ்தீன மக்களின் பல்லாண்டுகால கனவை முறியடித்தது. பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சினையில் அமெரிக்காவின் போலித்தனம் மற்றும் “இரட்டை வரையறை” மீண்டும் வெளிப்படுத்தப்பட்டன. காசாப் பகுதியில் போர் தொடர்ந்தது. அமெரிக்கா குறிப்பிடத்தக்க பங்காற்றவில்லை. பாலஸ்தீன மக்கள் நீதியான வேண்டுகோளை முன்வைத்த போது, அமெரிக்கா நியாயமற்ற முறையில் இதைத் தடுத்தது.
ஒரு புறம், மத்திய கிழக்கில் தனது மேலாதிக்கவாதத்தை வலுப்படுத்துவதற்கும், உள்நாட்டில் அரசியல் தேவைக்கு ஏற்பவும், கடந்த பல்லாண்டுகளில் அமெரிக்க அரசுகள், இஸ்ரேலை முக்கிய கூட்டாளியாகக் கருதி, இஸ்ரேல் மீது அளவுக்கு மீறிய வஞ்சக ஆதரவு அளித்து வருகின்றன. மறுபுறம், பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சினை தொடர்பான எந்த முன்னேற்றமும் தன் தலைமையில் நடைபெற வேண்டும் என அமெரிக்கா கருதுகிறது. ஐ.நாவில் சேர பாலஸ்தீனம் ஒரு சார்பாக விண்ணப்பித்தால், பாலஸ்தீன-இஸ்ரேல் அமைதியான வளர்ச்சி போக்கில் அமெரிக்காவின் தலைமை பங்கினைப் பலவீனப்படுத்தும். அமெரிக்காவைப் பொறுத்த வரை, பாலஸ்தீன-இஸ்ரேல் அமைதியை நனவாக்க முடியுமா என்பது முக்கியமானதாக இல்லை. தனது நலனைப் பேணிக்காப்பது தான் முக்கியமானது என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டினர்.
ஏப்ரல் 19ஆம் நாள் ஈரான் மீது இஸ்ரேல் வரம்புக்கு உட்பட்ட வான் தாக்குதலை நடத்தியது. மத்திய கிழக்குப் பிரதேசம் புதிய சுற்று பழிவாங்கும் நடவடிக்கையில் சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது. பாஸ்தீனப் பிரச்சினை, மத்திய கிழக்குப் பிரச்சினையின் மையமாகும். இந்நிலையில் முந்தைய காலத்துடன் ஒப்பிடும் போது, பாலஸ்தீனத்தை ஐ.நாவின் அதிகாப்பூர்வ உறுப்பு நாடாக சேர்ப்பது, மேலும் அவசியமாக இருக்கிறது.