முதல் காலாண்டில் சீனா ஈர்த்த அன்னிய முதலீடு
2024-04-21 15:30:32

இவ்வாண்டின் முதல் காலாண்டில், சீனாவில் 12 ஆயிரம் வெளிநாட்டு முதலீட்டுத் தொழில் நிறுவனங்கள் புதிதாக நிறுவப்பட்டன. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 20.7 விழுக்காடு அதிகரித்துள்ளது. உண்மையில் பயன்படுத்தப்பட்ட அன்னிய முதலீட்டுத் தொகை 30 ஆயிரத்து 167 கோடி யுவானை எட்டி, வரலாற்றில் உயர்ந்த நிலையில் இருக்கிறது.

ஏப்ரல் 19ஆம் நாள் சீன அரசவை தகவல் தொடர்புப் பணியகம் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் சீன வணிக அமைச்சகத்தின் துணை அமைச்சர் குவோ திங்திங் கூறுகையில், முதலாவது காலாண்டில் உயர் தொழில் நுட்ப தயாரிப்பு துறை ஈர்த்த முதலீடு 12.5 விழுக்காடு வகிக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 2.2 சதவீதப் புள்ளிகள் அதிகரித்துள்ளது. பொது மக்களின் வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்புடைய சேவை துறை ஈர்த்த முதலீடும் வேகமாக அதிகரித்தது என்று தெரிவித்தார்.