உலகின் பசுமை வளர்ச்சிக்கு சீனாவின் பங்கிற்கு வெளிநாட்டவர்கள் பாராட்டு
2024-04-21 10:09:18

சீனாவின் மின்சார வாகனங்கள், இலித்தியம் மின்கலங்கள், ஒளிவோல்ட்டா மின்கலப் பொருட்கள் ஆகியவை உலகச் சந்தையில் வரவேற்பைப் பெற்ற நிலைமையில், சீனாவின் புதிய ஆற்றல் உற்பத்திப் பொருட்கள் அளவுக்கு மீறியது என்று வேண்டுமென்றே பரப்புரை செய்யப்பட்டது. ஆனால், சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் அண்மையில் மேற்கொண்ட பொது மக்கள் கருத்து கணிப்பின்படி, உலகப் பொருளாதாரம் மற்றும் உலகின் பசுமை வளர்ச்சிக்கு சீனாவின் புதிய ஆற்றல் தொழிற்துறை ஆற்றிய பங்கிற்கு 88.62 விழுக்காட்டினர் பாராட்டு தெரிவித்தனர்.

இந்தக் கருத்து கணிப்பின்படி, புதிய ஆற்றல் தொழில் நுட்பம் மற்றும் உற்பத்திப் பொருட்களுக்கு உலகச் சந்தையில் பெரும் தேவை மற்றும் உள்ளார்ந்த ஆற்றல் உண்டு என்று 84.86 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர். மேலும், உலகமயமாக்க காலத்தில், வேறுபட்ட நாடுகள் வேறுபட்ட மேம்பாடுகள் உண்டு என்றும் ஒத்துழைப்புகளை வலுபடுத்துவது, பிரச்சினைகளைத் தீர்க்கும் முக்கிய வழிமுறை என்றும் 88.46 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.

தவிரவும், உலகளவில் புதிய ஆற்றல் துறையின் சீரான வளர்ச்சி, நேர்மையான மற்றும் நியாயமான சர்வதேச ஒழுங்கின் அடிப்படையில் முன்னேற்றப்பட வேண்டும். வளரும் நாடுகளின் நலன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று 91.93 விழுக்காட்டினர் தெரிவித்தனர். மேலும், உற்பத்தித் திறன், பொருளாதார விவகாரமாகும். இதனை அரசியலுடன் ஒன்றிணைக்கக்கூடாது என்று 83.87 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.

இந்தக் கருத்து கணிப்பு, ஆங்கிலம், ஸ்பெனிஷ், அரபு, பிரேஞ்சு, ரஷியா உள்ளிட்ட மொழிகளில் நடத்தப்பட்டது. 24 மணி நேரத்துக்குள் 5470 வெளிநாட்டவர்கள் இதில் கலந்து கொண்டு கருத்துகளைத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.