காசாவில் போர் நிறுத்தம் பற்றி துருக்கி அரசுத் தலைவர் வேண்டுகோள்
2024-04-21 18:58:21

காசா பகுதியில் நிகழ்ந்த வன்முறை செயல்களைத் தடுக்கும் வகையில், இப்பகுதியில் நிரந்தர போர் நிறுத்தத்தை வெகு விரைவில் நனவாக்க வேண்டும் என்று துருக்கி அரசுத் தலைவர் ரேசேப் தாயிப் எர்தோகன் 20ஆம் நாள் வேண்டுகோள் விடுத்தார்.

அன்று அவர் துருக்கியின் இஸ்தான்பூலில் உள்ள அரசுத் தலைவர் மாளிகையின் அலுவலகத்தில் பாலஸ்தீன ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் குழு தலைவர் ஹனியாவைச் சந்தித்தார். தடையில்லாத நிலைமையில் காசா பகுதிக்கு தொடரவல்ல மனித நேய உதவியை வழங்கும் அவசியம் பற்றியும் இப்பிராந்தியத்தில் நீண்டகால அமைதிப் போக்கினை நனவாக்குவது பற்றியும் இருவர் விவாதித்தனர் என்று துருக்கி அரசுத் தலைவர் மாளிகையின் தகவல் தொடர்பு பணியகம் சமூக ஊடகத்தில் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டது.

தவிர, அன்று எர்தோகன் எகிப்து வெளியுறவு அமைச்சர் ஷோக்ரியைச் சந்தித்தார். இரு தரப்புறவு, பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல், ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான பகைமை ஆகியவை குறித்து அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர் என்று துருக்கி அரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.