கம்போடிய மன்னருடன் சந்திப்பு:வாங்யீ
2024-04-22 10:51:19

கம்போடிய மன்னர் நோரோடோம் சிஹமோனி 21ஆம் நாள், அந்நாட்டின் தலைநகர் பினோம் பென்னில், சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீயுடன் சந்திப்பு நடத்தினார்.

ஒரே சீனா எனும் கொள்கையை கம்போடியா பின்பற்றி வருகிறது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் மனித குலத்தின் பொது சமூகம் மற்றும் 3 முக்கிய உலக முன்மொழிவுகளுக்கும் கம்போடியா ஆதரவளித்து வருகிறது. இரு தரப்பு நட்புறவு தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து, புதிய முன்னேற்றமடையும் என்று சிஹமோனி தெரிவித்தார்.

இரு நாட்டுத் தலைவர்களின் வழிகாட்டுதலுடன், இரு தரப்புகளுக்கிடையில் பொது சமூகக் கட்டுமானம், உயர் தரம் மற்றும் உயர் நிலை புதிய காலக்கட்டத்தில் அடி எடுத்து வைத்துள்ளது. கம்போடியாவுடன் சேர்ந்து, இரு நாட்டுத் தலைவர்களின் ஒருமித்த கருத்துகளை சீராக செயல்படுத்த சீனா விரும்புகிறது என்றும் வாங்யீ தெரிவித்தார்.

அதே நாளில், அந்நாட்டின் துணைத் தலைமையமைச்சரும் மற்றும் வெளியுறவு அமைச்சருமான சோக் செண்டா சோபியாவை வாங்யீ சந்தித்தார்.