வெப்ப அலை பாதிப்புக்கு எதிராக போக்குவரத்து காவல்துறையினருக்கு குளிரூட்டப்பட்ட தலைகவசம் அறிமுகம்
2024-04-22 19:00:47

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலை தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில், சாலைகளில் பணியாற்றும் போக்குவரத்து காவல்துறையினருக்கு குளிரூட்டும் வசதியுடன் கூடிய தலை கவசங்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இத்தகைய தலைக்கவசங்கள் 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை  உயரும் போது, தானாகவே குளிரூட்டும் வசதியை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் சூரிய  வெப்பத்தில் இருந்து கண்களைப் பாதுகாக்கவும் கவசங்கள்  கொண்டிருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடும் வெயில் தாக்கம்  காரணமாக சாலையில் பணிபுரியும் போக்குவரத்து காவல்துறையினர் மயக்கம் அடைவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து குஜராத்தில் இந்த தலைகவசம் அறிமுகப்படுத்தப்பட்டது.  இத்தலைகவசம் பேட்டரியின் முழு சார்ஜில் எட்டு மணி நேரம் வரை செயல்படும்.

ஏப்ரல் திங்கள் முதல் ஜூன்  திங்கள் வரை நாடு முழுவதும் கடுமையான வெப்பத்தை எதிர்கொள்ளும் என்றும், மத்திய மற்றும் மேற்கு தீபகற்ப பகுதிகள் மோசமாக பாதிக்கப்ப வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.