2024ஆம் ஆண்டு ஜெர்மனியின் ஹன்னோவர் தொழிற்துறை பொருட்காட்சி துவக்கம்
2024-04-22 19:01:43

2024ஆம் ஆண்டு ஜெர்மனியின் ஹன்னோவர் தொழிற்துறை பொருட்காட்சி ஏப்ரல் 21ஆம் நாளிரவு துவங்கியது. தொழிற்துறையின் தொடரவல்ல வளர்ச்சிக்கு உயிராற்றலை ஊட்டுவது என்பது, நடப்பு பொருட்காட்சியின் தலைப்பாகும்.

ஏப்ரல் 22 முதல் 26ஆம் நாள் வரை நடைபெறுகின்ற இப்பொருட்காட்சியில், 60 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 4000 தொழில் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இதில் சீனத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 30 விழுக்காடு வகிக்கிறது குறிப்பிடத்தக்கது.

எரியாற்றல் வளர்ச்சி முறை மாற்றம், தொழிற்துறை 4.0, எண்ணியல்மயமாக்கம், செயற்கை நுண்ணறிவு முதலியவை, நடப்புப் பொருட்காட்சியிலுள்ள முக்கிய அம்சங்களாகும்.