உலகின் முதல் உயர் துல்லியமான சந்திரனின் நிலவியல் பற்றிய படத் தொகுப்பு
2024-04-22 11:24:22

சீன அறிவியலாளரால் தொகுக்கப்பட்ட உலகின் முதல் உயர் துல்லியமான சந்திரனின் நிலவியல் பற்றிய படத் தொகுப்பு ஏப்ரல் 21ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த படத் தொகுப்பில் முழு சந்திரனின் நிலவியல் வரைபடம், சந்திரனின் கற்பாறை வகை பரவல் வரைபடம், சந்திரனின் கட்டமைப்பு வரைபடம் முதலிய உள்ளடக்கங்கள் அடங்கியுள்ளன.

இந்த படத் தொகுப்பு, சீனாவின் சாங் ஏ பொறியியல் அறிவியல் ஆய்வு தரவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது சந்திர அறிவியல் துறையில் சீனாவின் விரிவான ஒருங்கிணைப்பு சாதனையாகும். தவிரவும், சந்திரனின் ஆய்வுத் திட்டப்பணிக்கான அடிப்படை தகவல்களையும் அறிவியல் குறிப்புகளையும் வழங்குவது மட்டுமல்லாமல், சந்திரனின் தோற்றம், மாற்றம் மற்றும் சூரிய மண்டலத்தின் மாற்றம் பற்றிய ஆய்வுக்குச் இப்படத்தொகுப்பு பங்காற்ற முடியும்.