இயற்கை பாதுகாப்பு பற்றிய ஐ.நா தலைமைச் செயலாளரின் வேண்டுகோள்
2024-04-23 17:29:00

ஏப்ரல் 22ஆம் நாள் உலகப் புவி நாளாகும். ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்ரேஸ் அன்று உரை நிகழ்த்திய போது கூறுகையில், சர்வதேச சமூகம் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, இயற்கையுடன் இணக்கமான உறவை மீண்டும் உருவாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

தொடரவல்ல வளர்ச்சியை நனவாக்கும் வகையில், இயற்கையுடன் இணக்கமான உறவை மீண்டும் உருவாக்கி, தொடரவல்ல உற்பத்தி மற்றும் நுகர்வு வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், சுற்றுச்சூழல் நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு ஆதரவு அளிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், தேவையான நிதியுதவியைப் பயன்படுத்தி, பல்வேறு நாடுகள் இயற்கையைப் பாதுகாத்து, தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.