ஆசிய-பசிபிக் பிரதேசத்துக்கு மேலதிக வாய்ப்புகளை உருவாக்கும் சீனா
2024-04-23 19:47:56

ஐ.நாவின் ஆசிய-பசிபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் 80வது ஆண்டுக்கூட்டத்தின் அமைச்சர்கள் கூட்டம் ஏப்ரல் 22 முதல் 26ஆம் நாள் வரை தாய்லாந்தில் நடைபெறுகிறது. சீனப் பிரதிநிதிக் குழு இக்கூட்டத்தில் பங்கெடுத்தது.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 23ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், ஆசிய-பசிபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணையம், ஆசிய-பசிபிக் பிரதேசத்தில் ஒட்டுமொத்த பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான ஐ.நாவின் மிக முக்கியமான அமைப்பாகும். நடப்புக் கூட்டத்தில், ஆசிய-பசிபிக் தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்றும் எண்ணியல் புத்தாக்கம் என்ற தலைப்பு குறித்து, பல்வேறு தரப்புகள் விவாதம் நடத்தி, ஒத்த கருத்துகளை உருவாக்கி, பல பயனுள்ள ஒத்துழைப்புச் சாதனைகளைப் பெற்றுள்ளன. சீனப் பிரதிநிதிக் குழுவுக்குத் தலைமை தாங்கிய சீன வெளியுறவுத் துணை அமைச்சர் மா சாவ்ஷு, உரை நிகழ்த்திய போது, ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் சூழ்நிலை மற்றும் பிரதேச ஒத்துழைப்பு பற்றிய சீனாவின் கருத்துகளை எடுத்துக் கூறினார் என்றார்.

மேலும்,  ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் முக்கிய உறுப்பு நாடான சீனா, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானம், உலக வளர்ச்சி முன்மொழிவு முதலியவை குறித்து, ஆசிய-பசிபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணையத்துடன் தொடர்புகளை வலுப்படுத்தி, ஆசிய-பசிபிக் ஒத்துழைப்புகளுக்கு வலிமைமிக்க இயக்காற்றலை ஊட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.