காசா பகுதியில் போர்நிறுத்த ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தையில் ஹமாஸின் கோரிக்கை மாறவில்லை
2024-04-23 09:37:04

காசா பகுதியில் போர்நிறுத்த ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தையில் ஹமாஸ் இயக்கத்தின் கோரிக்கை மாறவில்லை. ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் தடையாக இருந்தது என்ற அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனின் அறிக்கைக்கு ஹமாஸ் இயக்கம் ஏப்ரல் 22ஆம் நாளிரவு வெளியிட்ட அறிக்கையில் மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளது.

காசா பகுதியில் நிரந்தர போர்நிறுத்தத்தை நனவாக்குவது, இஸ்ரேல் படை காசா பகுதியிலிருந்து வெளியேறுவது, அனைத்து பகுதிகளிலும் உள்ள அகதிகள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவது, மீட்பு அளவை அதிகரிப்பது, புனரமைப்பு பணிகளைத் தொடங்குவது ஆகியவை ஹமாஸ் இயக்கத்தின் கோரிக்கைகளாகும். இக்கோரிக்கைகளுக்குத் தொடர்புடைய தரப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன என்று ஹமாஸ் இயக்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.