2023ஆம் ஆண்டு இயற்கை சீற்றங்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆசியா
2024-04-23 19:18:27

உலக வானிலை அமைப்பு 23ஆம் நாள் வெளியிட்ட 2023ஆம் ஆண்டுக்கான ஆசிய காலநிலை நிலைமை பற்றிய அறிக்கையின்படி, வானிலை, காலநிலை மற்றும் நீரியல் தொடர்பான ஆபத்தான காரணிகளின் பாதிப்புடன், 2023ஆம் ஆண்டு ஆசியா, உலகளவில் இயற்கை சீற்றங்கள் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட பிரதேசமாகும். வெள்ளப்பெருக்கு மற்றும் புயல் மழையினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார இழப்புகள் மிக அதிகம். வெப்ப அலையின் பாதிப்பு மேலும் கடுமையானது.

ஆசியாவில் வெப்பமாகும் வேகம், உலகின் சராசரி நிலையை விட விரைவாக இருக்கிறது. புள்ளி விவரங்களின்படி, 2023ஆம் ஆண்டு ஆசியாவில் நீரியல் வானிலை சீற்றச் சம்பவம் தொடர்பான 79 சீற்றங்கள் ஏற்பட்டன. இதில் 80 விழுக்காட்டுக்கும் மேலான சீற்றங்கள், வெள்ளப்பெருக்கு மற்றும் புயல் காற்றுடன் தொடர்புடையவை. சீற்றங்களில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 90 லட்சம் பேர் நேரடியாக பாதிக்கப்பட்டனர் என்று இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.