அமெரிக்க வெளியுறவு அமைச்சரின் பயணத்துக்கு சீனா கவனம்
2024-04-23 11:30:30

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீயின் அழைப்பின் பேரில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், ஏப்ரல் 24ஆம் நாள் முதல் 26ஆம் நாள் வரை, சீனாவில் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் 22ஆம் நாள் தெரிவித்தது.

அதே நாள், சீன வெளியுறவு அமைச்சகத்தைச் சேர்ந்த வட அமெரிக்க மற்றும் ஓஷினியா பிரிவின் பொறுப்பாளர் ஒருவர் இது குறித்து கூறுகையில்,

ஆண்டனி பிளிங்கன்னின் பயணத்தின் போது, சீனத் தரப்பு, சரியான புரிந்துணர்வை உருவாக்குவது,  பேச்சுவார்த்தையை வலுப்படுத்துவது, கருத்து வேற்றுமையைச் சரியாகக் கட்டுப்படுத்துவது, பரஸ்பர ஒத்துழைப்பை விரைவுபடுத்துவது, பெரிய நாடுகளின் பொறுப்புகளைக் கூட்டாக பொறுப்பேற்பது ஆகிய 5 அம்சங்களின் மீது கவனம் செலுத்தும் என்று தெரிவித்தார்.