கம்போடியா தலைமையமைச்சருடன் சீன வெளியுறவு அமைச்சர் சந்திப்பு
2024-04-23 09:55:56

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ ஏப்ரல் 22ஆம் நாள் புனோம் பெனில் கம்போடியா தலைமையமைச்சர் ஹுன் மானெட்டுடன் சந்தித்துரையாடினார்.

வாங்யீ கூறுகையில், இரு நாட்டு தலைவர்களும் எட்டியுள்ள முக்கிய பொது கருத்துக்களை இரு தரப்பும் ஆக்கப்பூர்வமாக நிறைவேற்றி வருகின்றன. இந்நிலைமையில், அடிப்படை வசதிகள், உற்பத்தி திறனுக்கான ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய திட்டங்களின் நடைமுறையாக்கம், இரு நாட்டு மக்களுக்கும் பலன்களைக் கொண்டு வந்துள்ளது என்று தெரிவித்தார்.

ஹுன் மானெட் கூறுகையில், பல்வேறு துறைகளில் சீனாவுடனான ஒத்துழைப்புகளை வலுப்படுத்த கம்போடியா விரும்புவதாகவும், அதிகமான சீனத் தொழில் நிறுவனங்கள் கம்போடியாவில் முதலீடு செய்வதை வரவேற்பதாகவும் தெரிவித்தார். மேலும், சீனாவுடன் இணைந்து, அதிகமான முக்கிய திட்டங்கள் நடைமுறைக்குக் கொண்டு வருவதை முன்னேற்றவும், பல தரப்பு விவகாரங்களில் நெருக்கமான ஒருங்கிணைப்பை மேற்கொள்ளவும் கம்போடியா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.