புதிய ஆற்றல், அளவுக்கு அதிகமாக அல்லது குறைவாக இருக்கும்?
2024-04-24 10:21:46

கார்பன் நடுநிலை இலக்கை நிறைவேற்றும் வகையில்,உலகின் புதிய ஆற்றல் வாகனங்களின் விற்பனை 2030ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 4கோடியே 50லட்சமாக இருக்க வேண்டும். இது, 2022ஆம் ஆண்டில் இருந்ததை விட 4.5 மடங்கு அதிகம். மேலும் சூரிய ஒளி மின் உற்பத்தி அளவு பெருமளவில் அதிகரிக்கப்பட வேண்டும் என்று சர்வதேச ஆற்றல் முகமை கணித்துள்ளது.

இந்நிலையில், இன்றைய உலகத்தில் எதிர்கொள்ளப்படும் பிரச்சினையே, புதிய ஆற்றலின் உற்பத்தி திறன் அளவுக்கு அதிகமானது அல்ல. மாறாக, பற்றாக்குறைப் பிரச்சினை ஆகும்.   எரியாற்றல் நெருக்கடி தணிவு, காலநிலை மாற்றச் சமாளிப்பு, குறைந்த கார்பன் மற்றும் பசுமை மாற்றம் ஆகியவற்றுக்காக, புதிய ஆற்றல் துறையின் வளர்ச்சி அவசியமானது.