2025ஆம் ஆண்டு காலநிலை வாக்குறுதி என்னும் முன்மொழிவு
2024-04-24 19:18:59

2025ஆம் ஆண்டு காலநிலை வாக்குறுதி என்னும் முன்மொழிவை ஐ.நாவின் வளர்ச்சித் திட்ட அலுவலகம் ஏப்ரல் 23ஆம் நாள் முன்வைத்தது. ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்ரேஸ் அன்று கூறுகையில், இந்த முன்மொழிவில் கலந்து கொள்ளும் மேலதிக கூட்டாளிகள் மேலும் நல்ல ஆதரவுகளைப் பெறும். தொடரவல்ல வளர்ச்சி, காலநிலை நடவடிக்கையுடனான ஒன்றிணைப்புக்கு மேலும் பெரும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார்.

தட்ப வெப்ப நிலை கட்டுப்பாட்டுடன் தொடர்புடைய இலக்குகளை பல்வேறு நாடுகள் வகுப்பதற்கு உதவியளிப்பது, இந்த முன்மொழிவின் நோக்கமாகும். இதற்கு முன், 100க்கும் மேலான நாடுகள் தொடர்புடைய ஒத்துழைப்புகளில் பங்கெடுத்துள்ளன. புதிதாக வெளியிடப்பட்ட 2025ஆம் ஆண்டு காலநிலை வாக்குறுதி என்னும் முன்மொழிவில், மேலதிக ஒத்துழைப்புக் கூட்டாளிகள் பங்கெடுக்கும் என்று ஐ.நா தெரிவித்துள்ளது.