2024ஆம் ஆண்டு ஐ.நாவின் சீன மொழி தினக் கொண்டாட்டம்
2024-04-24 10:32:46

2024ஆம் ஆண்டு ஐ.நாவின் சீன மொழி தினக் கொண்டாட்டம் ஏப்ரல் 23ஆம் நாள் ஜெனீவாவிலுள்ள ஐ.நா அலுவலகத்தில் நடைபெற்றது. அதேவளையில், சீன ஊடகக் குழுமம், ஜெனீவாவிலுள்ள ஐ.நா அலுவலகம், ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகம் மற்றும் ஸ்விட்சர்லாந்திலுள்ள பிற சர்வதேச அமைப்புகளுக்கான சீன பிரதிநிதிக் குழு ஆகியவற்றால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்ட 4ஆவது சி.எம்.ஜி சீன மொழி வீடியோ விழாவும் நடைபெற்றது.

சிறந்த உலகத்தை உருவாக்குவதற்கு இளைஞர்கள் பங்களிப்பு என்ற கருப்பொருள் கொண்ட இந்த வீடியோ விழாவில் உலக நாடுகளில் இருந்து படைப்புகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மார்ச் 19ஆம் நாள் தொடங்கப்பட்டு தற்போது வரை, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான்,தாய்லாந்து, போலாந்து, அர்ஜென்டீனாஉள்ளிட்ட 47 நாடுகள் மற்றும் பிரதேசங்களிலிருந்து மொத்தம் 1009 படைப்புகள் கிடைத்துள்ளன.