பலதரப்புவாத லட்சியத்துக்குக் கூட்டாகப் பங்காற்ற வேண்டும்:சீனா
2024-04-25 18:15:52

ஐ.நாவுக்கான சீனத் துணை நிரந்தரப் பிரதிநிதி கெங்ஷுவாங் ஏப்ரல் 24ஆம் நாள் கூறுகையில், இவ்வாண்டு மற்றும் அடுத்த ஆண்டில், ஐ.நா எதிர்கால உச்சிமாநாட்டை நடத்தவுள்ளது. அத்துடன், ஐ.நா உருவாக்கப்பட்ட 80ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டம் நடத்தப்படும். பல்வேறு நாடுகள் இதனை வாய்ப்புகளாக கொண்டு, சர்வதேச சமூகம் ஐ.நாவின் தலைமையில் மேலும் நெருக்கமாக ஒன்றுபடுவதை முன்னேற்றி, தூதாண்மைக்கான சிந்தனை மற்றும் நடைமுறையை வலுப்படுத்தி, பலதரப்புவாத லட்சியத்துக்குக் கூட்டாகப் பங்காற்ற வேண்டும் என்றார்.

மேலும், ஐ.நா சாசனத்தின் அதிகார தன்மையை உறுதியுடன் பேணிக்காக்க வேண்டும். சர்வதேச சட்டத்தை அடிப்படையாக கொண்ட சர்வதேச ஒழுங்கை பேணிக்காக்க வேண்டும். சர்வதேச விவகாரங்களில் பல்வேறு நாடுகள் சமத்துவ முறையில் பங்கெடுப்பதை உத்தரவாதம் செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.