ஈரான் மற்றும் இலங்கையின் கூட்டு திட்டமான உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடக்கம்
2024-04-25 17:40:06

இலங்கை சென்றுள்ள ஈரான் நாட்டின் அரசு தலைவரான இப்ராஹிம் ரய்சி மற்றும் இலங்கை அரசு தலைவரான ரணில் விக்ரமசிங்க ஆகியோர்  290 ஜிகாவாட் மின்சக்தி உற்பத்தியை மேற்கொள்ளும் உமா ஓயா பல்நோக்கு வளர்ச்சி செயல் திட்டத்தை ஏப்ரல் 24ம் நாள் தொடங்கி வைத்தனர். இது இலங்கையின் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டங்களில் ஒன்றாகும் என்று இலங்கை அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

தொடக்க விழாவில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, ஈரானிய தொழில்நுட்பத்துடன் 514 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக கூறினார்.

தொழில்நுட்ப ஒத்துழைப்பின் மூலம், ஈரானும் இலங்கையும் உலகிற்கு ஒரு பிரகாசமான முன்மாதிரியை அமைத்துள்ளன என்று ரைசி கூறினார். உமா ஓயா பள்ளத்தாக்கிலிருந்து ஆண்டு தோறும் சராசரியாக 145 மில்லியன் கன மீட்டர் நீரை திருப்பி விடுவதன் மூலம் இலங்கையின் தென்கிழக்கு பிராந்தியத்தில் நீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதே இந்த திட்டத்தின் முதன்மை நோக்கமாகும் என்று நீர்ப்பாசன அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தொடக்க விழாவில் தெரிவித்தார்.

இந்த திட்டத்தின் மூலம் 4,500 ஹெக்டேர் புதிய பாசன நிலங்களுக்கும், தற்போதுள்ள 1,500 ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கும் தண்ணீர் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.