செர்பியாவில் சீனத் திரைபட பருவம் என்ற நிகழ்ச்சி
2024-04-25 19:27:17


சீன ஊடக குழுமமும் செர்பிய தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையமும் கூட்டாக நடத்திய “சீனத் திரைபடப் பருவம்” என்ற நடவடிக்கை ஏப்ரல் 25ஆம் நாள் செர்பியாவின் பெல்கிரேடுவில் துவங்கியது. சீன ஊடக குழுமத்தால் தயாரிக்கப்பட்ட பத்துக்கும் அதிகமான திரைபடங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், செர்பிய தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையத்தில் ஒளிபரப்பப்படும். அவை செர்பிய பார்வையாளர்களுக்கு புதிய காலத்தின் சீனாவின் உயிராற்றலைக் காட்சிப்படுத்தி, சீன-செர்பிய நட்புறவு பற்றிய கதைகளை விவரித்து, இரு நாடுகளின் நாகரிகப் பரிமாற்றம், ஒன்றுக்கொன்று நன்மை பயக்கும் ஒத்துழைப்பு, வளர்ச்சி மற்றும் கூட்டு வெற்றி என்ற அருமையான விருப்பத்தை வெளிப்படுத்தும்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணை தலைவரும், சீன ஊடக குழுமத்தின் இயக்குநருமான ஷேன் ஹாய்சியுங் இந்நடவடிக்கையின் துவக்க விழாவில் உரை நிகழ்த்தினார். சீன மொழி மீதான ஆர்வம் செர்பியாவில் அதிகரித்து வருகிறது. மேலதிக செர்பிய மக்கள், சீனாவின் தலைசிறந்த திரைபடங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிளை அறிந்து கொண்டு நேசித்துள்ளனர். சீன ஊடக குழுமத்தால் தயாரிக்கப்பட்ட திரைபடங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் செர்பியப் பார்வையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. செர்பியாவின் பல்வேறு துறைகளுடன் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி, இரு நாட்டு நட்புறவு புதிய காலத்தில் புதிய ஒளிவீசுவதை முன்னேற்ற சீன ஊடக குழுமம் விரும்புவதாக தெரிவித்தார்.