“அதிக உற்பத்தி திறன்”பற்றிய பிரசாரம் நியாயமற்றது:சீனா
2024-04-26 10:16:47

சில மேலை நாடுகள் அண்மைக்காலமாகத் தொடர்ந்து விமர்சித்து வரும் சீனாவின் “அதிக உற்பத்தி திறன்” என்னும் நியாயமற்ற பிரச்சாரத்தைத் தீவிரமாக்கும் செயலைச் சீனா உறுதியாக எதிர்ப்பதாகச் சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் 25ம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

 உலகளவில் புதிய ஆற்றல் துறையில் அதிக உற்பத்தி திறனுக்குப் பதிலாக, குறைந்த உற்பத்தி திறன் நிலைமை நிலவி வருகிறது. சீனாவின் புதிய எரியாற்றல் தொழில், அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய உற்பத்தி திறனைத் தொடர்ந்து வழங்குவதோடு உலகின் பசுமை வளர்ச்சிக்கும் முக்கியப் பங்கு ஆற்றி வருகிறது. இந்நிலையில், சீனாவின் மீது சில நாடுகள் மற்றும் பிரதேசங்கள் அவதூறு பரப்பும் செயல், உலகின் பசுமை மாற்றப் போக்கைத் தடுத்து, காலநிலை மாற்றத்துக்கான ஒத்துழைப்பின் நம்பிக்கையை அசைத்துப் பார்ப்பதோடு வெளிநாட்டு வர்த்தக முதலீடு மற்றும் ஒத்துழைப்பில் ஈடுபடும் தொழில் நிறுவனங்களின் மனவுறுதிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால், சீனாவின் புதிய எரியாற்றல் உற்பத்திப் பொருட்கள், உலகின் பசுமை மாற்றப் போக்கிற்கு ஆற்றி வரும் முக்கியப் பங்கினைத் தொடர்புடைய நாடுகள் நியாயமாக மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

படம்:VCG