பாலஸ்தீன-இஸ்ரேல் போர் நிறுத்த வேண்டும்: பொது கருத்து கணிப்பு
2024-04-26 16:11:20

சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் அண்மையில், உலகளவில் இணையப் பயன்பாட்டாளர்களுக்கான கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது.  பாலஸ்தீனமும் இஸ்ரேலும் உடனடியாக போரை நிறுத்த வேண்டும். மேலும் கடுமையான மனித நேய நெருக்கடி நிகழாமல் தவிர்க்க வேண்டும் என்று இக்கணிப்புக்குள்ளான 90.5 விழுகாட்டினர்கள் உறுதியாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். தவிரவும், பல தரப்புகள் சர்வதேச மனித நேய சட்டக் கடப்பாட்டைப் பின்பற்ற வேண்டும். அப்பாவி மக்கள் மீதான வன்முறை தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று 93.5 விழுகாட்டினர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் அண்மையில், வெளிநாட்டுக்கான உதவிச் சட்டத்தில் கையொப்பமிட்டுள்ளார். இஸ்ரேலுக்கு தொடர்ந்து 2600 கோடி அமெரிக்க டாலர் நிதியுதவியை வழங்கும். கருத்துக் கணிப்பில் விசாரணைபடுத்தப்பட்டோரில் 92 விழுக்காட்டினர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஐ.நா பாதுகாப்பவையின் தொடர்புடைய தீர்மானம் மற்றும் சர்வதேச பொது கருத்துக்களின்படி, பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சினையை நியாயமாகத் தீர்க்க வேண்டும். சுமார் 88 விழுக்காட்டினர்கள் இதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளனர்.