சீனா மற்றும் அமெரிக்கா உருவாக்கிய 5 ஒத்தக் கருத்துகள்
2024-04-26 19:48:41

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனுடன் ஏப்ரல் 26ஆம் நாள் பேச்சுவார்த்தை நடத்தினார். கருத்துகளைப் பன்முகங்களிலும் பரிமாற்றிய அடிப்படையில், இரு தரப்பினரும் 5 ஒத்த கருத்துகளை உருவாக்கினர்.

முதலாவதாக, இரு நாட்டு அரசுத் தலைவர்களின் வழிக்காட்டலுடன், சீன-அமெரிக்க உறவை முயற்சியுடன் வளர்க்க இரு தரப்பும் ஒப்புக் கொண்டனர். இரண்டாவதாக, உயர்நிலை தொடர்பு மற்றும் பல்வேறு நிலைகளிலான தொடர்பை நிலைநிறுத்த இரு தரப்பும் ஒப்புக் கொண்டனர். மூன்றாவதாக, செயற்கை நுண்ணறிவு பற்றிய சீன-அமெரிக்க அரசுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைக்கான முதலாவது கூட்டம், சீன-அமெரிக்க உறவுக்கான வழிக்காட்டல் கோட்பாடுகள் பற்றிய கலந்தாய்வு, புதிய சுற்று ஆசிய-பசிபிக் விவகாரத்துக்கான சீன-அமெரிக்க கலந்தாய்வு, சீன-அமெரிக்க கடல் விவகாரத்துக்கான கலந்தாய்வு முதலியவற்றை நடத்தவுள்ளதாக இரு தரப்பும் அறிவித்தன. நான்காவதாக, இரு தரப்பும் நடவடிக்கைகளை மேற்கொண்டு, மானுடவியல் பரிமாற்றங்களை விரிவுப்படுத்தும். ஐந்தாவதாக, சர்வதேச மற்றும் பிரதேசத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்து இரு தரப்பும் கலந்தாய்வை நிலைநிறுத்தி, இரு தரப்புகளின் சிறப்புத் தூதர்கள் தொடர்புகளை வலுப்படுத்தவுள்ளனர்.