வெற்றிகரமாக செலுத்தப்பட்ட ஷென் ச்சோ-18 விண்வெளிக் கலம்
2024-04-26 09:38:29

சுமார் பத்து நிமிடங்களுக்குப் பிறகு, ஷேன்ச்சோ-18 விண்வெளிக் கலம் ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாக பிரிக்கப்பட்டு திட்டமிட்ட சுற்றுப்பாதையில் நுழைந்துள்ளது. அதில் பயணித்த விண்வெளி வீரர்கள் நல்ல நிலையில் உள்ளனர். இதனையடுத்து ஏவுதல் கடமை முழுமையாக வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விண்வெளிக்கலம் சுற்றுப்பாதையில் நுழைந்த பிறகு, முன்னரே தீர்மானிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப, விண்வெளி நிலையக் குழுவைச் சுயமாகவும் விரைவாகவும் சந்தித்து ஷென்ச்சோ 17 விண்வெளிக் கலத்துடன் இணையும். ஷென்ச்சோ 18 விண்வெளி வீரர்கள் ஷென்ச்சோ 17 விண்வெளி வீரர்களுடன் சுற்றுப்பாதையில் சுழற்சி செய்வார்கள். இந்த விண்வெளி நிலையத்தின் வேலை மற்றும் வாழ்க்கையின் போது, ஷேன்ச்சோ 18 விண்வெளி வீரர்கள் மைக்ரோகிராவிட்டியின் அடிப்படை இயற்பியல், விண்வெளி பொருட்கள் அறிவியல், விண்வெளி வாழ்க்கை அறிவியல், விண்வெளி மருத்துவம், விண்வெளி தொழில்நுட்பம் முதலிய பல சோதனைகள் மற்றும் பயன்பாடுகளை மேற்கொள்வார்கள்.