அமெரிக்காவின் நிதியுதவி மசோதா பற்றிய கருத்து கணிப்பு
2024-04-26 18:59:13

அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் அண்மையில் 9500 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள வெளிநாட்டு நிதியுதவி பற்றிய மசோதாவில் கையொப்பமிட்டார். பலரைப் பொறுத்த வரை, உதவி என்ற பெயரில், குழப்பமாகி வரும் உலகிற்கு மேலதிக குழப்பத்தை இது ஏற்படுத்தியுள்ளது. சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் அண்மையில் மேற்கொண்ட கருத்து கணிப்பின்படி, அமெரிக்காவின் நிதியுதவி, அமெரிக்காவின் மிக அதிக நலன்களைத் துவக்கப் புள்ளி மற்றும் இறுதி புள்ளியாக கொண்டு, உதவி பெற்ற நாடுகளின் உகந்த நலன்கள் மற்றும் நீண்டகால வளர்ச்சியைப் பொருட்படுத்தாமல் இருக்கிறது என்று 89.87 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.

அமெரிக்காவின் நிதியுதவி, படைக்கல நிறுவனங்களுடன் நலன் ரீதியான தொடர்புடையது என்றும், மனித நேய நெருக்கடியைப் பயன்படுத்தி லாபம் பெற்றுள்ளது என்றும் 94.92 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர். உலகின் பல பிரதேசங்களில் உள்ள மோதல்களில் ஈடுபட்டுள்ள தரப்புகளுக்கு ராணுவ உதவியை அமெரிக்கா வழங்கி, பிரதேசத்தின் பதற்ற நிலைமையை மேலும் தீவிரமாக்கியுள்ளது என்று 89.34 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.

அமெரிக்கா பல்வேறு வடிவங்களிலும் நிதியுதவி பெற்ற நாடுகளில் அமெரிக்க பாணி மதிப்பு கண்ணோட்டம் மற்றும் “ஜனநாயக மாதிரியை” வலுக்கட்டாயமாக பரவல் செய்துள்ளது என்றும், நிதியுதவி பெற்ற நாடுகளில் முரண்பாடுகள் ஏற்பட்டு, சூழ்நிலை மோசமாகியுள்ளது என்றும் 88.68 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.

இந்தக் கருத்து கணிப்பு, ஆங்கிலம், ஸ்பெனிஷ், பிரேஞ்சு, அரபு, ரஷியா உள்ளிட்ட மொழிகளில் நடத்தப்பட்டது. 24 மணி நேரத்துக்குள் 9534 வெளிநாட்டவர்கள் இதில் கலந்து கொண்டு கருத்துகளைத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.