சீன-அமெரிக்க உறவு பற்றிய சீனாவின் தொடர்ச்சியான கருத்துக்கள்
2024-04-26 10:22:28

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ பெய்ஜிங்கில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனுடன் ஏப்ரல் 26ஆம் நாள் பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.

வாங் யீ கூறுகையில், மனித குலத்துக்கான பொது எதிர்காலத்தை உருவாக்கும் வகையில் சீனா எப்போதும் சீன-அமெரிக்க உறவைக் கவனமாக முன்னெடுத்துச் செல்கின்றது. அதன் அடிப்படையில் மக்களுக்கும் உலகிற்கும் எதிர்காலத்திற்கும் பொறுப்பேற்க வேண்டும். சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த ஒன்றுக்கு ஒன்று மதிப்பளித்தல், அமைதியான சகவாழ்வு மற்றும் ஒத்துழைப்புடன் கூட்டு வெற்றி பெறுதல் ஆகிய கோட்பாடுகளைச் சீனா எப்போதும் பின்பற்றி வருகின்றது. இப்போக்கு, சீன-அமெரிக்க உறவின் நிதானமான ஆரோக்கியமான மற்றும் தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்றப் பாடுபடும். அதோடு, இரு நாட்டுக்கு இடையிலான மையமான நலன்களைச் சீனா மதிப்பதோடு அவற்றை எப்போதும் ஆதரித்து வருகின்றது.

இச்சந்திப்பின் போது, சீனாவின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடக் கூடாது. சீனாவின் வளர்ச்சியை அடக்கக்கூடாது. சீனாவின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்கள் சார்ந்த எல்லைக் கோட்டை அமெரிக்கா மிதிக்கக்கூடாது என்ற கருத்துகளையும் வாங்யீ வலியுறுத்தினார்.