அர்ஜென்டீனா, பொலிவியா மற்றும் பெரு வெளியுறவு அமைச்சர்கள் சீனப் பயணம்
2024-04-26 18:57:10

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங் யீயின் அழைப்பை ஏற்று, அர்ஜென்டீனா வெளியுறவு, சர்வதேச வர்த்தகம் மற்றும் மத விவகார அமைச்சர் மன்டினோ ஏப்ரல் 27 முதல் மே முதல் நாள் வரை சீனாவில் பயணம் மேற்கொள்ளவுள்ளார். பொலிவிய வெளியுறவு அமைச்சர் சோசா, பெரு வெளியுறவு அமைச்சர் காங்சாலேஸ்-ஓலேசேயா ஆகியோர் ஏப்ரல் 28 முதல் 30ஆம் நாள் வரை சீனாவில் பயணம் மேற்கொள்ளவுள்ளனர் என்று சீன வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின் 26ஆம் நாள் அறிவித்தார்.