பருவமழை முன்கணிப்பு அறிக்கை இந்திய பணவீக்க கவலையை எளிதாக்கும்
2024-04-26 17:21:29

இந்திய நிதித்துறை அமைச்சகம் மார்ச் மாதத்திற்க்கான மாதாந்திர பொருளாதார ஆய்வு அறிக்கையை, கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டது, இதில் 2024 ஆம் ஆண்டில் இயல்பை விட  அதிகமான பருவமழை பெய்யும் என்ற இந்திய வானிலை ஆய்வு மைய முன்னறிவிப்பு நாட்டின் சிறந்த பயிர் அறுவடைக்கு பயனளிக்கும் என்றும் நாட்டின் பணவீக்க கவலைகளை தணிவுப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது..

உலகளாவிய சவால்கள் மற்றும் புவிசார் அரசியல் கவலைகள் இருந்தபோதிலும் இந்தியாவின் பொருளாதார செயல்திறன் வலுவாக இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "2023-2024 நிதியாண்டில் பணவீக்கம் 2024 மாச்சில் 3.3 சதவீதம் வரை  வீழ்ச்சியடைந்தது.

வளர்ந்த நாடுகளில் தேவை குறைவு மற்றும் வர்த்தக பலவீனங்கள், உலகளாவிய வர்த்தக பொருட்களின் விலைகளில் சரிவு ஆகியவற்றால் 2023 ஆம் ஆண்டில் உலகளாவிய வர்த்தகம் குறைந்தள்ளதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.