அளவுக்கு அதிகமானது, சீனாவின் உற்பத்தித் திறன் அல்ல... அமெரிக்காவின் பாதுகாப்புவாதம் தான்!
2024-04-27 16:58:20

‘அதிக உற்பத்தி திறன்’ என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டு தொடர்ச்சியாக பன்னாட்டு சமூகத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சி.ஜி.டி.என் தொலைக்காட்சி நிறுவனம் உலகளாவிய கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது. முடிவின்படி, கருத்துக்கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 91.4விழுக்காட்டினர், அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டிற்கு அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லை என்று கருத்து தெரிவித்தனர். மேலும், அளவுக்கு அதிகமானது, சீனாவின் உற்பத்தித் திறன் அல்ல, அமெரிக்காவின் பாதுகாப்புவாதம் தான் என்றும் கூறியுள்ளனர்.

தயாரிப்புகளின் ஏற்றுமதி மற்றும் உற்பத்தித் திறன் ஆகியவற்றுக்கிடையேயான வித்தியாசத்தைப் பொருட்படுத்தாமல், அமெரிக்க தரப்பு வேண்டுமென்றே ஒன்றுக்கு பதிலாக இன்னொன்றை சொல்லி தனது கருத்தை வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவில் சில்லுகள், ஆயுதங்கள், வேளாண் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி உலகச் சந்தையில் முறையே 48 சதவீதம், 42 சதவீதம், 10சதவீதம் இடம்பிடித்தது. தவிரவும், பெரிய விமானம் மற்றும் அதன் பாகங்கள், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு, மருந்துகள் ஆகியவற்றில் அமெரிக்கா உலகில் முக்கிய இடம் வகிக்கிறது. இந்த உண்மைகளைப் பார்த்தால், அதிக ஏற்றுமதி என்றால், அதிக உற்பத்தித் திறன் என்ற அர்த்தம் இல்லை என்று 91.49 விழுக்காட்டினர் கூறினர்.

வர்த்தகப் போட்டியில் சாதக நிலையில் உள்ள அமெரிக்கா, தடையற்ற வர்த்தகத்தை வலியுறுத்தும். ஆனால், சாதக நிலை இல்லாதிருந்தால் , வேறு நாடுகள் அளவுக்கு அதிகமாக உற்பத்தியில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டும். அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு வெறுப்பை ஏற்படுத்துவதாக 94.66 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.