பெய்ஜிங்கில் ஹமாஸ் மற்றும் ஃபத்தா பேச்சுவார்த்தை பற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் பதில்
2024-04-27 16:51:32

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் மற்றும் ஃபத்தா ஆகியவற்றுக்கிடையே பெய்ஜிங்கில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்பாக, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 26ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் கேள்விக்குப் பதில் அளித்தார்.

அப்போது வாங்வென்பின் கூறுகையில், 

பாலஸ்தீன தேசிய அதிகார நிறுவனத்தின் அதிகாரத்தை வலுப்படுத்துவதற்கு சீனா எப்போதும் ஆதரவு அளிக்கின்றது. மேலும், பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாலோசனை வழியாக, பாலஸ்தீனத்தின் பல்வேறு பிரிவுகளிடையே உள்ள நல்லிணக்கம் அடைவதற்கும் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் சீனா ஆதரவு அளிக்கிறது என்று குறிப்பிட்டார்.