வேளாண்மை முதல் காலநிலை மாற்றம் வரை சீன-சுரிநாம் ஒத்துழைப்பு
2024-04-27 17:24:24

சுரிநாம் குடியரசுத் தலைவர் சந்தோகி சமீபத்தில் சீனாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தில், இருதரப்பு ஒத்துழைப்பு உறவை புதிய கட்டத்திற்கும் புதிய உயர்வுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று ஒத்த கருத்து எட்டப்பட்டுள்ளது. இந்த சீனப் பயணம் குறித்து சந்தோகி சீன ஊடகக் குழுமத்திற்கு சிறப்பு நேர்காணலை அளித்த போது

பல உடன்படிக்கைகள் கையெழுத்தாகியுள்ளன. விவசாய உற்பத்தியில், தற்போது சரமக்கா மாவட்டத்தில் சீனாவைச் சேர்ந்த வேளாண் தொழில்நுட்ப உதவித் திட்டம் ஒன்று உள்ளது. சீனாவின் வல்லுநர்கள் குழு உயர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாய உற்பத்தித் திறனை மேம்படுத்தி வருகிறது. தவிரவும், உள்ளூர் விவசாயிகளுக்கு தானிய விளைச்சல் அதிகரிப்பு, பயிர் வளர்ப்பு போன்ற பயிற்சிகளை அளித்து வருகிறது. மேலும், காலநிலை மாற்றம் என்ற உலகளாவிய அறைகூவல்களைச் சமாளிக்க, சீனாவின் வனத்துறையைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, காடுகள் மேலாண்மை மற்றும் கொள்கைக்கான ஒத்துழைப்பு, தொழில்நுட்ப ஆதரவு ஆகியவை குறித்து உடன்பாட்டை உருவாக்கியுள்ளோம் என்று குறிப்பிட்டார்.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஒத்துழைப்புக் கட்டமைப்பின் கீழ், இரு தரப்புகள், நாட்டின் வளர்ச்சிக்கான பெரிய திட்டத்தை செயல்படுத்துவதோடு, மக்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கான சிறிய திட்டத்தையும் நடைமுறைப்படுத்தியுள்ளன. சுரிநாம் நாட்டில் மக்கள் தொகை கிட்டத்தட்ட 6 லட்சமாகும். 2 லட்சம் மக்கள் கிராமப்புறங்களில் வாழ்ந்து வருகின்றனர். மழைக்காடு மற்றும் நதிகள் ஆகிய இயற்கைச்சூழலில், கிராமப்புறங்களில் அடிப்படை வசதிக் கட்டுமானம் பின்தங்கிய நிலையில் உள்ளது. சில கிராமங்களில் இன்னும் மின் இணைப்பு கிடைக்கவில்லை. 

இச்சிக்கலைத் தீர்க்கும் வகையில், சீன நிறுவனம் 2023ஆம் ஆண்டு ஜுனில் உள்ளூரில் முதலாவது சூரியஒளி மின் நிலையத்தை கட்டியமைத்தது. 2ஆவது மின் நிலையம் இவ்வாண்டிற்குள் கட்டி முடிக்கப்பட்டு மின்சார உற்பத்தியை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025ஆம் ஆண்டு செப்டம்பர்ல் 5ஆவது மின் நிலையம் கட்டி முடிக்கப்படுவதுடன், இந்த 5 மின் நிலையங்களும் 14ஆயிரம் கிராமவாசிகளின் மின் தேவையைப் பூர்த்தி செய்யும்.  இது, அந்நாட்டின் கிராமப்புறங்களிலுள்ள மக்கள் தொகையில் 7 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.