காசா பகுதியில் போர்நிறுத்தத்தை விரைவில் முன்னெடுப்பது அவசரமானது:வாங் யீ
2024-04-28 14:07:36

அண்மையில், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ கத்தாரைச் சேர்ந்த அல் ஜசீரா ஊடக வலைப்பின்னலுக்கு எழுத்து வடிவிலான பேட்டி அளித்தார். இந்த பேட்டியில் காசா மோதல், ரஷிய-உக்ரைன் மோதல், தைவான் கேள்வி, சீன-அமெரிக்க உறவு உள்ளிட்ட அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

காசா மோதல் பற்றி அப்போது வாங் யீ கூறுகையில்,  காசா மோதலின் தொடர்ச்சி,  நடக்க கூடாத மனிதநேய பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இது, நவீன நாகரிகத்தின் அடிக்கோட்டைத் தாண்டியது. முதலில், போர்நிறுத்தத்தை விரைவில் முன்னெடுப்பதுஅவசரமானது. இது முதன்மைக் கடமையாகும். இரண்டாவது, மனிதாபிமான உதவி தடையின்றி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இது ஒத்தி வைக்கப்பட முடியா பொறுப்பாகும். மூன்றாவது, இந்த மோதலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்ச்சியாக வெளியுகத்திற்கு பரவாமல் தடுக்க  வேண்டும். இது, பிராந்திய நிலைமை கட்டுப்பாட்டை இழப்பதைத் தவிர்ப்பதற்கான தேவையாகும். நான்காவது, வரலாற்றில் பாலஸ்தீன மக்களுக்கு நியாயமற்ற தன்மையை காலதாமதமின்றி சரிசெய்ய வேண்டும். இது, காசா மோதலைத் தீர்ப்பதற்கான அடிப்படை வழிமுறையாகும் என்று சுட்டிக்காட்டினார்.