இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை ஆதரவளிக்கும் அமெரிக்காவுக்கு நூற்றுக்கணக்கானோர் எதிர்ப்பு
2024-04-28 15:00:40

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, ஏப்ரல் 27ஆம் நாள் அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் வெள்ளை மாளிகைச் செய்தியாளர்கள் சங்கத்தின் வருடாந்திர இரவு விருந்தில் பங்கேற்ற போது, வெளியே நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் நின்றனர். காசா பிரதேசத்தில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளுக்கு பைடன் ஆதரவளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, அவர்கள் முழக்கமிட்டதோடு, அன்றைய விருந்தைப் புறக்கணிக்குமாறு செய்தியாளர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.