சீன-பிரெஞ்சு கூட்டு வெற்றி ஒத்துழைப்பில் சீனா ஊன்றி நிற்கும்: வாங்யீ
2024-04-28 09:50:21

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ 27ஆம் நாள், பிரெஞ்சு அரசுத் தலைவருக்கான வெளிவிவகார ஆலோசகர் எம்மானூல் பொன்னுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார்.

வாங்யீ கூறுகையில்,

தற்சார்ப்பு மற்றும் கூட்டு வெற்றி பெறும் ஒத்துழைப்பில் இரு தரப்பும் ஊன்றி நின்று, உலகப் பிரிவினை மற்றும் முகாம் பகைமையை எதிர்த்து வருகின்றன. தற்போதைய சர்வதேச நிலைமை சிக்கலாகவும் கொந்தளிப்பாகவும் விளங்குகின்றது. பிரான்சின் உயர் நிலை தொடர்பை வலுப்படுத்தி, இரு நாடுகளின் பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்புகள் புதிய காலக்கட்டத்திற்கு தூண்டி, உலகளவில் அச்சுறுத்தலைச் சமாளிப்பதற்கு இரு நாடுகள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று சீனத் தரப்பு விருப்பம் தெரிவிதுள்ளது என்றார் அவர்.

இரு நாட்டின் தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 60ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இரு நாடுகளின் உயர் நிலை தொடர்பை வலுப்படுத்தி, ஒன்றுக்கு ஒன்று நம்பிக்கையை ஆழமாக்கி, பயனுள்ள ஒத்தழைப்புகளை அதிகரித்து, ஒன்றுக்கு ஒன்று நலன் தர பாடுபட வேண்டும் என்று பொன் தெரிவித்தார்.