தைவான் சீனாவிலிருந்து பிரிக்க முடியாத பகுதி:வாங்யீ
2024-04-28 11:30:55

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ அண்மையில், கத்தார் அல் ஜசீரா நெட்வொர்க்கு பேட்டியளித்த போது கூறுகையில்,

பண்டைக்காலந்தொட்டே, தைவான் சீனாவிலிருந்து பிரிக்கப்படாத  ஒரு பகுதியாகும்.

தற்போது, தைவான் நீரிணை நிலைமை நிதானமாக இருந்த போதிலும், கடும் அறைகூவலை எதிர்நோக்கி வருகிறது. தைவான் சுதந்திர சக்தியின் பிரிவினை நடவடிக்கை, வெளிபுற சக்தியின் பாதிப்பு மற்றும் சீர்குலைவு முதலியவை என்பது மிகவும் கடும் அறைகூவலாகும் என்றார் அவர்.

தாய்நாட்டின் ஒன்றிணைப்பை நனவாக்குவது, மக்களின் விருப்பம், யுகத்தின் ஓட்டம் மற்றும் வரலாற்றில் தவிர்க்க முடியாத போக்காகும். எந்த சக்திகளும் இதைத் தடுக்க முடியாது என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வலியுறுத்தினார். முழுமையான ஒற்றுமையை சீனா நனவாக்கும். தைவான், தாய்நாட்டின் அரவணைப்புக்கு இணையும் என்றும் வாங்யீ தெரிவித்தார்.