முன்னேறிய தொழிலாளர்கள் மற்றும் அமைப்புகளுக்குப் பாராட்டு விழா
2024-04-28 18:49:21

2024ம் ஆண்டின் சர்வதேச தொழிலாளர் தினக் கொண்டாட்டமும், தொழிலாளர்களுக்கான தேசிய விருது மற்றும் முன்னோடி தொழிலாளர் என்ற விருது பெற்றவர்களுக்கான பாராட்டு விழாவும் ஏப்ரல் 28ம் நாள் பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமண்டபத்தில் நடைபெற்றது. சீனத் தேசியத் தொழில் சங்கச் சம்மேளனத்தின் தலைவர் வாங் டுங் மிங் இவற்றில் பங்கெடுத்து உரைநிகழ்த்தினார்.

அவர், அனைத்து தேசிய இனத்தின் தொழிலாளர்கள், விவசாயிகள், அறிவாளிகள் மற்றும் பல்வேறு வர்க்கத் தொழிலாளர்களுக்கும், விழா வாழ்த்தையும் மதிப்பையும் தெரிவித்தார்.

பாராட்டு விழாவில், 255 அமைப்புகள், 1088 தனிநபர்கள் ஆகியோர், தேசிய தொழிலாளர் பதக்கம் மற்றும் சான்றிதழைப் பெற்றனர். 1034 அமைப்புகள், முன்னோடி தொழிலாளர் விருது பெற்றன.