ஜனவரி மற்றும் பிப்ரவரியில் ரஷிய ஜி.டி.பி. 6விழுக்காடு அதிகரிப்பு
2024-04-28 10:00:25

ரஷிய அரசுத் தலைவர் விளடிமிர் புதின் ஏப்ரல் 27ஆம் நாள் அரசு உறுப்பினர்களுடன் ரஷிய பொருளாதாரம் பற்றிய கூட்டம் ஒன்றை நடத்தினார். அப்போது புதின் கூறுகையில், ரஷிய பொருளாதாரம் சீராக வளர்ந்துள்ளது. இவ்வாண்டின் முதல் 2 மாதங்களில் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 6விழுக்காடு அதிகரித்தது. இவ்வாண்டு ரஷியாவின் பொருளாதாரம் 3விழுக்காடு வளர்ச்சியடையக் கூடும் என்று புதின் தெரிவித்தார்.

மேலும், இவ்வாண்டின் முதல் காலாண்டில் கடந்த ஆண்டில் இருந்ததை விட, ரஷியாவின் கூட்டாட்சி வருவாய் 50விழுக்காடு அதிக்கரித்தது. அது வரவுச்செலவு பற்றாக்குறையைக் குறைப்பதற்கு துணை புரியும் என்றும் அவர் கூறினார்.