சீன விண்வெளி நிலையத்தில் பணி ஒப்படைப்பு நிகழ்ச்சி நிறைவு
2024-04-28 18:52:39

மனிதரை ஏற்றிச்செல்லும் ஷென்சோ-17, ஷென்சோ-18 ஆகிய இரண்டு விண்கலங்களின் விண்வெளி வீரர்களுக்கிடையே பணி ஒப்படைப்பு நிகழ்ச்சி 28ஆம் நாள் சீன விண்வெளி நிலையத்தில் நடைபெற்றது.

தற்போது வரை, ஷென்சோ-17 விண்கலத்தின் விண்வெளி வீரர்கள் குழு திட்டப்படி அனைத்து ஆய்வுப்பணிகளையும் நிறைவேற்றியுள்ளது. அவர்கள் வரும் 30ஆம் நாள் சென்சோ-17 எனும் விண்கலத்தில் பூமிக்குத் திரும்ப உள்ளனர். அவர்கள் குறிப்பிட்ட பகுதியில் இறங்குவதற்கான  ஏற்பாட்டு பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருவதாக சீனாவின் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளி பொறியியல் அலுவலகம் தெரிவித்தது.