உலகத்தின் கூட்டு ஒத்துழைப்பு அதிகரிப்பு:உலகப் பொருளாதார மன்றம்
2024-04-29 12:48:12

உலகப் பொருளாதார மன்றத்தின் சிறப்பு கூட்டம் 28ஆம் நாள் சௌதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் துவங்கியது. இரண்டு நாட்கள் நீடிக்கும் இக்கூட்டம் உலகளாவிய ஒத்துழைப்பு, வளர்ச்சி மற்றும் எரியாற்றல் ஆகியவற்றில் முக்கிய கவனம் செலுத்தியது. சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் மூலம் மேலும் வலுவான உலகளாவிய பொருளாதாரத்தை எவ்வாறு உருவாக்குவது என்பது இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 60க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 220க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

புவிசார் அரசியலின் பதட்ட நிலைமை, சமூகப் பொருளாதாரத்தின் ஏற்றத்தாழ்வு ஆகியவை, உலகளாவிய வேறுபாடுகளை ஆழப்படுத்தின. சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் இலக்கின் மீதான உரையாடல் ஆகியவை முன்னேப்போதையும் விட மிகவும் அவசரமானவை என்று இம்மன்றத்தின் தலைவர் போர்கே ப்ரெண்டே இக்கூட்டத்தில் தெரிவித்தார். இந்த சிறப்பு கூட்டம், அனைத்து தரப்பு மற்றும் பிராந்தியங்களிலிருந்தும் வந்த தலைவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி, அறைகூவல்களுக்கான தீர்வுகளை ஆராய்ந்து சமாளிக்கவுள்ளது என்றார்.