மூன்று லத்தீன் அமெரிக்க நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் சீனப் பயணம்
2024-04-29 19:38:58

அர்ஜென்டினா, பொலிவியா, பெரு ஆகிய மூன்று நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் சீனப் பயணம் குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லீன்ஜியன் 29ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கேள்விக்குப் பதில் அளித்தார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, மூன்று நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் முறையே பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இரு தரப்பு உறவு, பொது அக்கறைக் கொண்ட சர்வதேச மற்றும் பிரதேசப் பிரச்சினைகள் ஆகியவை குறித்து அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வார்கள் என்று லீன்ஜியன் தெரிவித்தார்.

மேலும், கடந்த ஆண்டுகளில், சீனாவுக்கும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் இடையே சீரான வளர்ச்சி இருந்து வந்தது. பரஸ்பர நம்பிக்கையும் ஒத்துழைப்பும் தொடர்ந்து ஆழமாகி வருகின்றன. சீனா லத்தீன் அமெரிக்க நாடுகளுடனான ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

தவிர, மூன்று நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் சீனப் பயணம், சீனா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் எதிர்கால வளர்ச்சிக்கு புதிய ஆற்றல் தரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.