சீனாவின்‘அதிக உற்பத்தி திறன்’எனும் கருத்து போலித்தனமானது: நியூ ஜெர்ச்சர் சயிட்யூன்ட்
2024-04-29 10:05:00

ஸ்விட்சர்லாந்து நியூ ஜெர்ச்சர் சயிட்யூன்ட் நாளேடு அண்மையில் விமர்சனக் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. ‘அதிக உற்பத்தி திறன்’என்ற சாக்குப்போக்கில் சீனா மீது மேலை நாடுகள் குற்றஞ்சாட்டுவது போலித்தனமானது. குறுகிய பார்வையானது. மாறாக, சீனாவுடனான போட்டியை எதிர்நோக்கி, நியாயமான சந்தை நுழைதலை விரைவுபடுத்தி, தரமுள்ள விலை குறைவான உற்பத்திப் பொருட்களால் பயனடையலாம் என்று இக்கட்டுரை தெரிவித்துள்ளது.

தற்போது, சீனாவின் உற்பத்திப் பொருட்கள், ஐரோப்பியச் சந்தைக்கு பரந்தளவில் பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கு ஆதரவளிக்கும் தரவுகள் காணப்படவில்லை. நீண்டகாலமாக, ஐரோப்பாவின் வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள், வாகனங்களின் மின்சார மயமாக்கத்தின் மாற்றங்களில் கவனம் செலுத்தவில்லை. மின்சார வாகனங்களுக்கு சீனா நிதியுதவியை வழங்குவது  போலித்தனமானது என்று இந்நிறுவனங்கள் குற்றச்சாட்டி வருகின்றன.

‘அதிக உற்பத்தி த’எனும் பிரச்சினையை சந்தை கட்டுப்படுத்தலாம். இதற்கு மாறாக, பாதுகாப்புவாதம், சந்தையின் கட்டுப்பாட்டுப் பங்குக்கு தீங்கு விளைவிக்கும் என்று இக்கட்டுரையில் வெளியிடப்பட்டது.