அப்பாவி மக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு பாலஸ்தீனம் கண்டிப்பு
2024-04-29 14:26:31

சௌதி அரேபிய தலைநகர் ரியாத்தில் உலகப் பொருளாதார மன்றக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அப்பாவி மக்கள் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நடத்துவதை பாலஸ்தீன அரசுத் தலைவர் அபாஸ் 28ஆம் நாள் கண்டித்தார். மேலும், இஸ்ரேல் உடனடியாக போரை நிறுத்த வேண்டும். காசா பகுதியிலுள்ள மக்களுக்கு மனித நேய உதவியை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.

கடந்த 200க்கும் மேலான நாட்களில், காசா பகுதியில் 34 ஆயிரத்திற்கும் மேலான மக்கள் இஸ்ரேலால் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலோர் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என்று அபாஸ் தெரிவித்தார்.

தற்போது, காசா பகுதியிலுள்ள ஏறக்குறைய பாலஸ்தீன மக்கள் அனைவரும், ரஃபா நகரில் திரண்டுள்ளனர். இப்பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், பாலஸ்தீன வரலாற்றில் மிக கடுமையான பேரிழவு ஏற்படும். இதன் விளைவாக, காசா பகுதியைத் தவிர, பிற பகுதிகளுக்கு இத்தகைய பாதிப்பு கொண்டு வரும். எனவே, ரஃபா மீது தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்றும் அபாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.