அடுத்த ஐந்து ஆண்டுகளில் சீனப் பொருளாதாரத்தின் பங்களிப்பு அதிகம்:ப்ளூம்பெர்க்
2024-04-29 09:47:50

இவ்வாண்டின் முதல் காலாண்டில் சீனாவின் ஒட்டுமொத்த பொருளாதார தரவு வெளியிடப்பட்டதன் மூலம், டீச் வங்கி, கோல்ட்மேன் சாக்ஸ், யுபிஎஸ் முதலிய வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 2024ஆம் ஆண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கான எதிர்பார்ப்புகளை உயர்த்தியுள்ளன. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் சீனப் பொருளாதாரத்தில் "நம்பிக்கை வாக்குகளை" வழங்கி இருக்கும்போது, சீனாவின் நிதி மற்றும் மூலதன சந்தைகளில் முதலீட்டு வாய்ப்புகளின் மீது நம்பிக்கை கொண்டுள்ளன.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்கு சீனா மிகப்பெரிய பங்களிப்பாளராக இருக்கும். மேலும் அதன் பங்களிப்பு விகிதம் ஜி 7 நாடுகளின் மொத்த தொகையை விட அதிகமாக இருக்கும். இது அமெரிக்காவை விட ஏறக்குறைய இரு மடங்கு அதிகம் என்று அண்மையில் அமெரிக்காவின் ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்தது.